49 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு.!
தமிழகம் முழுவதும் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.;
தமிழகம் முழுவதும் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பின்னர் தினமும் ஐஏஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறது. இதனால் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 49 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாநகர காவல் ஆணையராக செந்தாமரை கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போன்று திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா காவல்துறை நிர்வாக டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரயில்வே ஐஜியாக சுமித் சரண், சென்னை வடக்கு மண்டல ஐஜியாக சந்தோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.