மாவோயிஸ்ட் கைது எதிரொலி: தமிழகம், கேரளா, கர்நாடகாவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

தமிழகம், கேரளா, பெங்களூருவில் 23 இடங்களில் (என்.ஐ.ஏ.) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-12 09:15 GMT

தமிழகம், கேரளா, பெங்களூருவில் 23 இடங்களில் (என்.ஐ.ஏ.) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலத்தில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவருக்கு தொடர்புடைய 23 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கேரள சிறையில் தற்போது இருக்கும் மாவோயிஸ்ட் காளிதாஸ் சகோதரர் சிங்காரத்தின் வீடு சிவகங்கை அண்ணா நகரில் உள்ளது. அங்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போன்று கோவை மாவட்டம், புலியகுளம் பகுதியில் உள்ள மருத்துவர் தினேஷ் வீட்டிலும், சுங்கம் பகுதியில் உள்ள டேஷிஷ் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி பகுதியில் சந்தோஷ் என்பவரின் வீடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களான தேனி, பெரியகுளம் அண்ணாநகரிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் சோதனை நடைபெறும் இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar

Image Courtesy: ANI


Tags:    

Similar News