9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு !

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு 7,921 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.

Update: 2021-10-06 02:30 GMT

இதில் கிராம பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், ஒன்றிய வார்டு கவுன்சிலர் என்று மொத்தம் 4 அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாக்காளர்களும் 4 ஓட்டு போட வேண்டும்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. மாலை ஒரு மணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News