தமிழகத்தில் ஊரடங்கை ஒரு வாரம் நீட்டிக்கலாம்.. மருத்துவர்கள் குழு முதலமைச்சருக்கு பரிந்துரை.!
தமிழகத்தில் வருகின்ற ஜூன் 7ம் தேதியுடன் முழு ஊரடங்கு காலம் முடிவடைகிறது. இதனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தினமும் 25 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. தொற்றின் வேகம் இன்னும் குறையவில்லை என மருத்துவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற ஜூன் 7ம் தேதியுடன் முழு ஊரடங்கு காலம் முடிவடைகிறது. இதனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த அறிவிப்பை முதலமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் ஊரடங்கு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.