அரசியல் பேசுறதை விட்டுவிட்டு போதை பொருளை தடுக்குற வழியை பாருங்க - ஸ்டாலினுக்கு எல்.முருகன் அட்வைஸ்

தமிழகத்தில் போதை பொருட்களை தடுப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை வேண்டும் என்று மத்திய அமைச்சர் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Update: 2022-09-04 03:02 GMT

தமிழகத்தில் தற்போது போதைப் பொருட்களான கஞ்சா போன்ற பொருட்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகின்றது. தமிழகத்தை ஆளும் திமுக அரசு தற்போது இது பற்றி துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனில் போதை கலாச்சாரம் என்பது தமிழகம் முழுவதுமாக மாறிக் கொண்டிருக்கும் மிக மோசமாக கலாச்சாரமான இருந்து கொண்டு வருகின்றது. அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தற்போதைக்கு கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனையை தடுக்க ஆகப்பூர்வமான நடவடிக்கையை தி.மு.க எடுக்க வேண்டும் என்று மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் அவர்கள் வேண்டுகோளை விடுத்துள்ளார்.


ஏற்கனவே தமிழகம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், மக்கள் அனைவரும் ஒத்து தருவதன் பெயரில்தான் தமிழகத்தில் போதைப்பொருட்களின் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்றும் மக்களிடம் கோரிக்கை வைத்திருந்தார். தமிழகத்தில் போதைப்பொருட்களின் காரணத்திற்கு மத்திய அரசை காரணம் என்று கூறியும், குஜராத்தில் உள்ள துறைமுகம் வழியாக தான் தமிழகத்திற்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாகவும் அமைச்சர் பொன்முடி அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார்.


இந்த குற்றச்சாட்டிற்கு எதிராக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எல்.முருகன் அவர்கள், "தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசையே சாரும் என்றும், வீணான அரசியலை பேசுவதை விட்டுவிட்டு, தற்போது தமிழகத்தில் வேகமாக பரவி வரும் போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்" அவர் கூறி இருக்கிறார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News