தமிழக ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நியமிக்க வாய்ப்பு.!
தமிழகத்திற்கு புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 7ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதில் மத்திய சட்டம் நீதி தகவல் தொழில்நுட்பம் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ரவி சங்கர் பிராத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பாஜகவின் மிகவும் மூத்த தலைவரான இவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தமிழகத்தின் ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோஹித் பதவிக்காலம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைகிறது. இதனிடையே அவரை மாற்றிவிட்டு ரவிசங்கர் பிரசாத்தை விரைவில் புதிய ஆளுநராக நியமிக்க வாய்ப்பு உள்ளது.