தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்.!

புதிய கட்டுப்பாடுகளின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்கள் மற்றும் மதவழிபாட்டுத்தலங்களை மூடப்படுகிறது.

Update: 2021-04-26 03:46 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் நிலையில், தமிழகத்திலும் இதன் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த 20ம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.




 


இதனிடையே ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. அதன்படி இன்று அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்கள் மற்றும் மதவழிபாட்டுத்தலங்களை மூடப்படுகிறது.




 


புதிய கட்டுப்பாடுகளின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்கள் மற்றும் மதவழிபாட்டுத்தலங்களை மூடப்படுகிறது.அதே போன்று உடற்பயிற்சிக்கூடங்கள், மதுபான பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்படுகிறது. இதனிடையே சிறிய மளிகை கடை, காய்கறி உள்ளிட்ட கடைகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Similar News