தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு.!
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக திமுக எம்.எல்.ஏ., அப்பாவு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக திமுக எம்.எல்.ஏ., அப்பாவு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ., அப்பாவு சபாநாயகராக போட்டியிட சட்டப்பேரவை செயலாளரிடம் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதே போன்று துணை சபாநாயகருக்கு கு.பிச்சாண்டியும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து 12 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த பின்னர், மாற்று கட்சியினர் வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் சபாநாயகராக போட்டியின்றி அப்பாவு தேர்வாகியுள்ளார். அதே போன்று துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.