தமிழகத்தில் முதல் நாள் இரவுநேர ஊரடங்கு எப்படி இருந்தது.!
வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பேருந்து சேவைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று முதல் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கானது இரவு 10 மணிக்கு தொடங்கி விடியற்காலை 4 மணிக்கு நிறைவு பெறுகிறது. அந்த சமயத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது. ஆட்டா, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.
அதே நேரத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பேருந்து சேவைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர தேவைகளான மருத்துவம், விசான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கு வாடகை கார், ஆட்டோ, தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் மடடும் சுமார் 200 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறியிருந்தார். அவரது உத்தரவுப்படி சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதே போன்று பிற மாவட்டங்களில் இரவு 9 மணிக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வந்தனர். இதனால் எப்பவும் சுறுசுறுப்பாக காணப்படும் சாலைகள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கை மீறி சென்றவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர். இது போன்று மீண்டும் வெளியில் நடமாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.
இதனிடையே, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கின் முதல் நாள் இன்று காலை 4 மணியுடன் நிறைவு பெற்றது. அதிகாலை மணி முதல் அனைத்து பேருந்து சேவைகளும் தொடங்கியது.