தமிழகத்தில் தொடரும் ஒப்பந்த நர்சுகள் போராட்டம்: விசாரணை குழு அமைத்த தீர்வு காணுமா தி.மு.க அரசு?

தமிழகத்தில் தற்பொழுது விசாரணை குழு அமைத்து ஒப்பந்த நர்சுகள் விவகாரம் குறித்து தீர்வு காண வேண்டும் என்று சங்கத்தினர் கோரிக்கை.

Update: 2023-01-08 23:33 GMT

கொரோனா காலத்தின் போது செவிலியர்களாக உபது அடிப்படையில் பணியும் மருத்துவர்கள் ஒப்பந்த காலம் மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்து இருக்கிறது. இதன் காரணமாக மீண்டும் பணியும் படுத்தப்பட்ட செவிலியர்களை ஒப்பந்தத்தின் நீடித்து தங்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒப்பந்த நர்சுகள் போராட்டத்தில் களம் இறங்கி இருக்கிறார்கள். அவர்கள் தற்பொழுது தாங்கள் பணி இல்லாமல் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்கள் சங்கப் பிரதிநிதி உதயகுமார் அவர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்றின் போது அரசு உங்களை மிரட்டி வேலை வாங்கியதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தங்களால் யாரால் பாதிக்கப்படுகிறோமோ? அவர்களை வைத்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். 2,570 பேர் அழைக்கப்பட்டதில் 556 பேர் பணியில் சேர்ந்தார்கள். அப்பொழுது அதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டது. இதில் பணியில் சேராதவர்களுக்கு ஒரு மாதம் கழித்து இதை ஒதுக்கீடு பற்றி கணக்கெடுத்தார்கள். எனவே மீதி இதில் விதிமீறல் நடைபெறவில்லை, இதில் எப்படி விதிமீறல் வர முடியும்? இது எங்களுடைய வாதம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


மேலும் இந்த பிரச்சனை 2021 ஆம் ஆண்டு வரும் பொழுது ஏற்கனவே கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி இதற்கான உத்தரவையும் பிறப்பித்து இருக்கிறது. அந்த கமிட்டி கூறியது பொய்யா? என்று எங்கள் தரப்பில் சொல்ல வேண்டும் எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். முதலமைச்சர் இதை தெளிவுபடுத்த வேண்டும். இரண்டரை வருடம் வேலை வாங்கியதில் ஆறு மாதம் சம்பளம் தரவில்லை. பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகள் எங்களை விரட்டும் தோணியிலேயே பேசி இருக்கிறார்கள். இது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதன் மூலம் இங்கு தவறு நடந்துள்ளது? விதிமுறைகளை மீறியது யார்? என்பதை கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News