மூட்டைக்கு 80 ரூபாய் கமிஷன், இல்லைனா இடத்தை காலி பண்ணு - நெல்கொள்முதல் அவலம், வேதனையில் விவசாயிகள்

Update: 2022-04-25 14:04 GMT

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுதாக புகார் எழுந்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.80 வரை விவசாயிகளிடம் இருந்து முறைகேடாக பணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல முறை முறையிட்டும் இந்தக் கோரிக்கை தீர்க்கப்படவில்லை. அலுவலர்கள் அலட்சியமாகவே செயல்படுகின்றனர். 

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் விவசாயிகளை அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் கோடை மழையில் ஏராளமான நெல் மூட்டைகள் மழையில் நனைத்து வீணாகிவிட்டது. நெல் மூட்டைகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டுமென்றால் அதிகாரிகளுக்கு தனியாக கப்பம் கட்ட வேண்டும். 

அ.தி.மு.க. ஆட்சியில் மூட்டைக்கு 20 முதல் 40 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில்,  தி.மு.க. ஆட்சியில் மூட்டைக்கு 60 முதல் 80 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்யப்படுகிறது. 

தர மறுத்தால் எதையும் கொள்முதல் செய்வதில்லை. நெல்லில் ஈரப்பதம், கல், தூசு இருப்பதாக கூறி அலைக்கழிக்கிறார்களாம். இதனால், விவசாயிகள் வேறு வழியின்றி பணத்தை கொடுக்கின்றனர்.

கடந்த ஆட்சியில் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் மட்டுமே பணம் வசூல் செய்தனர். தற்போது அந்தந்தப் பகுதி தி.மு.க. நிர்வாகிகளும் கமிஷன் வேட்டையில் இறங்கி விட்டனர். அதனாலேயே விவசாயிகளிடம் கூடுதலாக பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. 

Inputs From: Dinamalar




 


Similar News