அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் அனைத்தும் நிரம்பும் நிலையில் உள்ளது. அரசு உடனடியாக முழுஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2021-05-08 03:54 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் அனைத்தும் நிரம்பும் நிலையில் உள்ளது. அரசு உடனடியாக முழுஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு மே 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த ஊரடங்கின்போது, அத்தியாவசிய கடைகள் தொடர்ந்து காலை முதல் மதியம் 12 மணி வரை இயங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News