காவல் நிலையத்தில் தனியார் விளம்பர பெயர் பலகை அகற்றம் !

தமிழக காவல் நிலையங்களில் தனியார் விளம்பரங்களுடன் கூடிய பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Update: 2021-09-18 05:08 GMT

தமிழக காவல் நிலையங்களில் தனியார் விளம்பரங்களுடன் கூடிய பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவுக்கு பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகள் மாற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வங்கியின் விளம்பரத்துடன் வைக்கப்பட்டிருந்த காவல் நிலைய பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, புதிதாக காவல் நிலையம், மயிலாடுதுறை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் பொருத்தப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Polimer News


Tags:    

Similar News