தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!
வளிமண்டலத்தில் நிலவி வரும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.
வளிமண்டலத்தில் நிலவி வரும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.
இது பற்றி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரிக்கடல் முதல் வடதமிழகம் வரை வளிமண்டலத்தில் சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் நாளை வரை கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதே போன்று ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 10,11 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசன மழை பெய்யக்கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.