தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை ! வானிலை மையம் தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Update: 2021-08-16 03:03 GMT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்கள், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Source: Polimer

Image Courtesy: Polimernews

https://www.polimernews.com/dnews/153054/தமிழகத்தில்-4-நாட்களுக்குபரவலாக-மழை-பெய்யக்கூடும்--வானிலை-மையம்

Tags:    

Similar News