தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Update: 2021-07-26 10:15 GMT

வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும். கடலோர மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் மழை பெய்யும்.


நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


மேலும், வருகின்ற 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News