தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.!

நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-07 07:50 GMT

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி கடல் பரப்பில் நிலவுகின்ற வளிமண்டல சுழற்சியாலும், உள் கர்நாடகம் வரை காணப்படும் காற்றழுத்த தாழ்வு காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 



9,10ம் தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களில் இன்று இயல்பை விட 5 டிகிரி பாரன்ஷீட் வரை பகல் நேர வெப்பநிலை உயரும் என்றும், பிற மாவட்டங்களில் இயல்லைவிட 3 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

Similar News