தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.!
மதுரை, கரூர், சேலம், நாமக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மதுரை, கரூர், சேலம், நாமக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான, மதுரை, கரூர், சேலம், நாமக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.