தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.

Update: 2021-07-06 08:55 GMT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.

அடுத்து வருகின்ற 24 மணி நேரத்திற்கு பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்கள் உட்பட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம்.

மேலும், மற்ற மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. அதே போன்று நாளை (7ம் தேதி) தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். சென்னையை பொறுத்தவரையில் நகரில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News