தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்.!
தென்கேரளம் முதல் தெற்கு கொங்கன் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த வருகின்ற 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் அதிகப்படியான வெயில் பதிவாகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தென்கேரளம் முதல் தெற்கு கொங்கன் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், தென்தமிழகம், வடஉள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
அதே போன்று இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்.