தமிழகத்தில் வருகின்ற 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. அனல் காற்று வீசியதால் மக்கள் சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.

Update: 2021-04-09 07:37 GMT

தமிழகத்தில் அடுத்த வருகின்ற 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. அனல் காற்று வீசியதால் மக்கள் சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்து வருகின்ற 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

4 நாட்கள் மழை பெய்யும் பட்சத்தில் வெப்பம் குறைந்து காணப்படும். இதனால் நீர் மட்டம் உயர்வதற்கு வாய்ப்புள்ளது.

Similar News