தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் வருகின்ற 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Update: 2021-05-22 13:02 GMT

தமிழகத்தில் வருகின்ற 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.




 


இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


 



அதே போன்று உள் மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (23ம் தேதி) கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, தேனி, கோவை, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.




 


வருகின்ற 24ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 25ம் தேதி கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

Similar News