தென்மேற்கு பருவக்காற்று.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-22 11:12 GMT

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்து வருகின்ற 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மேலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழக கடலோரம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் 2 நாட்களுக்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News