வெப்பச் சலனம்.. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.!

ஜூலை 10 முதல் 12 வரை நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Update: 2021-07-08 11:53 GMT

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


நீலகிரி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழையும் பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஜூலை 10 முதல் 12 வரை நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News