தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் ஒரு சில மாவடங்களில் நேற்று இரவு மழை பெய்தது. திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் உள் கர்நாடகா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி, நெல்லை, கோவை, தென்காசி மற்றும் நீலகிரியில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதே போன்று இதர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட காலநிலை நிலவும், 7,8ம் தேதிகளில் மாநிலத்தில் வறண்ட கால நிலையும், 9 மற்றும் 10ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் ஒரு சில மாவடங்களில் நேற்று இரவு மழை பெய்தது. திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.