தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Update: 2021-04-15 13:19 GMT

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார்கள். கடந்த வாரத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




 


இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கடும் வெப்பத்திற்கு இடையில் சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. அதே போன்று குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.




 


இது பற்றி சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.




 


இதே போன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் குளம் போன்று தேங்கியுள்ளது.

Similar News