ஜூலை 11ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்தம்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.!

இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யுவதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-09 06:17 GMT

வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, தெற்கு ஒடிசா,வடக்கு ஆந்திரா பகுதிகளில் உருவாகும் தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த காற்றழுத்தம் புயலாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா மற்றும் எந்த திசையை நோக்கி நகருகிறது என்பது பற்றிய விவரங்கள் அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யுவதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மேலும், தென்மேற்கு மற்றும் அரபிக்கடல் பகுதிகளிலும் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் ஜூலை 11 மற்றும் 12ம் தேதிகளில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News