தமிழ்நாட்டின் நகர்ப்புற சேவை மேம்பாட்டிற்கு ரூ.1,040 கோடி - மத்திய அரசு ஒப்பந்தம்!

தமிழ்நாட்டில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த இந்தியாவும், ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூ.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Update: 2022-12-29 00:44 GMT

தமிழ்நாட்டின் மூன்று நகரங்களில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு, கழிவு நீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோக முறைகளை உருவாக்குவதற்காக மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூ.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டத்திற்கான மூன்றாவது தொகுப்பு கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் ரஜித் குமார் மிஸ்ரா இந்தியா சார்பிலும், ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் இவ்வங்கியின் இந்திய அலுவலகப் பொறுப்பு அதிகாரி ஹோ யூன் யோங்கும் கையத்திட்டனர்.


தமிழ்நாட்டில் தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் ஆகியவற்றின் கட்டமைப்புக்காக 2018ல் ஆசிய வளர்ச்சி வங்கியால் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பல தொகுப்பு நிதி வசதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் மூன்றாவது மற்றும் கடைசி தொகுப்பாக இந்த ஒப்பந்தம் கையழுத்தாகியுள்ளது. இந்தத் தொகுப்பில் கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.


இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின் இது பற்றி விவரித்த திரு மிஸ்ரா, தமிழ்நாட்டின் தொழில்துறை மையங்களாகவும் விளங்குகின்ற திட்ட இலக்கு பகுதிகளில் வெள்ள நிலைக்கு எதிரான உறுதித்தன்மையை மேம்படுத்தவும் அடிப்படையான குடிநீர் மற்றும் துப்புரவு சேவைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யவும் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவும் என்றார். ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரி இயோங் கூறுகையில், இந்தத் திட்டத்தின் மூலம் கட்டமைத்தல், இயக்குதல் நடைமுறை, பெருமளவு தண்ணீரை பயன்படுத்துவதற்கான தானியங்கி மீட்டர்கள், கட்டுப்பாட்டு அறை மூலம் நிகழ்நேர கண்காணிப்பு, தரவுகள் பெறும் நடைமுறை ஆகியவற்றை செயல்படுத்தி இம்மாநிலத்தில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி தொடர்ச்சியாக உதவி செய்து வருகிறது என்றார். ஆசிய வளர்ச்சி வங்கியின் நகர்ப்புற முதலீடுகள் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவுவதோடு இணைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News