பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? தமிழக அரசு புதிய தகவல்.!

கொரோனா முழு ஊரடங்கு முடிவுற்ற பின்னர் பள்ளிகள் திறப்பது பற்றி அறிவிக்கப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020, 2021 கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை அனைவருமே தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

Update: 2021-06-01 05:49 GMT

கொரோனா முழு ஊரடங்கு முடிவுற்ற பின்னர் பள்ளிகள் திறப்பது பற்றி அறிவிக்கப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020, 2021 கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை அனைவருமே தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தமிழகத்தில் மட்டும் பள்ளி செல்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியாக உள்ளது. அதே போன்று 12ம் வகுப்பில் மட்டுமே 10 லட்சம் பேர் உள்ளனர். இதுவரை பள்ளி திறக்காததால் பெற்றோர்கள் அனைவரும் மாணவர்களின் எதிர்காலம் கருதி மிகுந்த கவலையில் உள்ளனர். பள்ளி திறப்பது எப்போது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் முழுஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துவருகிறது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி பாடப்புத்தகங்கள் மற்றும் இதர உதவிகள் வழங்குவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News