தமிழகத்தில் ஊரடங்கு எதிரொலி.. ஒரே நாளில் ரூ.426.24 கோடிக்கு மது விற்பனை.!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426.24 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், நாளை முதல் (மே 10 முதல் 24 வரை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-05-09 06:44 GMT

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426.24 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், நாளை முதல் (மே 10 முதல் 24 வரை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முழு ஊரடங்கின்போது டாஸ்மாக் மது கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மது பிரியர்கள் நேற்று ஒரே நாளில் 426 கோடிக்கு மது வாங்கிச் சென்றுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ. 100.43 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றும் மது வாங்குவதற்கு அதிகமானோர்கள் டாஸ்மாக் கடை வாசல்களில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News