தமிழகத்தில் லாக்டவுனுக்கு பின்னர் 90 சதவீத விபத்துக்கள் மதுவால் நடக்கிறது.. மருத்துவர்கள் குற்றச்சாட்டு.!

மதுக்கடை திறப்புக்கு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-06-17 07:34 GMT

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வில் மதுக்கடைகள் திறக்க தமிழக அரசு அறிவித்தது. இதனால் பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் மதுவாங்க கூட்டம், கூட்டமாக கூடுகின்றனர். இதனால் கொரோனா தொற்று வேகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.




 


அதிலும், ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் தமிழகத்தில் மதுவால் 90 சதவீத விபத்துக்கள் நடைபெறுவதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மதுவால் விபத்தை ஏற்படுத்தியவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக மூத்த மருத்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


 



மதுக்கடை திறப்புக்கு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News