தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக குறையும்: வானிலை ஆய்வு மையம்.!

காற்று வீசும் திசையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், வெப்பநிலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Update: 2021-04-05 03:38 GMT

தமிழகத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக வெப்பநிலை அதிகமாக இருந்தது. தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசியதால், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 6 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது.

இதனால் பொதுமக்கள் காலை 10 மணி முதல் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இந்த வெப்பம் உயர்வால் அவதிப்பட்டனர்.


 



இந்நிலையில் காற்று வீசும் திசையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், வெப்பநிலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருந்த போதிலும் ஓரிரு இடங்களில் அனல்காற்று வீச வாய்ப்புள்ளது. இதனிடையே வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக வடமாவட்டங்களில் இருநாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Similar News