கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 10 பேர் மட்டுமே அனுமதி: அறநிலையத்துறை அதிரடி.!
வணிக வளாகங்கள், கோயில்கள், திரையரங்கம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்து செல்கிறது இதனால் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி திருமண நிகழ்ச்சிகளில் குறைந்தபட்சம் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். துக்க நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகங்கள், கோயில்கள், திரையரங்கம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயில்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு புதிய கட்டுப்பாடுகளை இந்து அறநிலையத்துறை விதித்துள்ளது. கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் குறைந்தபட்சம் 10 பேர் மட்டுமே அனுமதி. மேலும், கோயிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.