தமிழகத்தில் இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு !
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.;
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் ஊரடங்கை 2 வாரங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அது மட்டுமின்றி சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 4 மாதங்களுக்கு பின்னர் தியேட்டர்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. அதில் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தியேட்டர்களில் நேற்று முதல் இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது.
Source, Image Courtesy: Daily Thanthi
https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/23020642/Theaters-and-parks-across-Tamil-Nadu-are-opening-today.vpf