தமிழகத்தில் இன்று 569 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இன்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று 569 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 56 ஆயிரத்து 264 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் 236 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் வரும் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து கொரோனா தொற்றை விரட்டியடிக்க உறுதிமொழி ஏற்க வேண்டும். அனைவரும் பொதுவெளியில் செல்லும்போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும்.