ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்: தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு.!

இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொதுபோக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றுக்கும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Update: 2021-04-19 04:48 GMT

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அதே போன்று வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் முழு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




 


மேலும், இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொதுபோக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றுக்கும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கான போக்குவரத்து சேவையும் இரவில் இயங்காது என்று அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், இரவு நேர ஊரடங்கில் ரயில் சேவைகளும் பாதிக்கப்படுமா என்று பொதுமக்களிடையே கேளவி எழுந்துள்ளது. ஆனால் இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள தெற்கு ரயில்வே, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில், தமிழக அரசு, ரயில்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தெற்கு ரயில்வேயிடம் தெரிவிக்கவில்லை.




 


இதன் காரணமாக தமிழகத்தில் வழக்கம் போல அனைத்து ரயில்களும் இயங்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது. அதே போன்று ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Similar News