தமிழகத்திற்கு வருவதற்கு இபாஸ் கட்டாயம்: மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு.!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு புதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் நாளை முதல் (ஏப்ரல் 10) மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகம் வருபவர்களுக்கு நாளை முதல் இ-பாஸ் கட்டாயம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு புதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. இதனையொட்டி மாநில எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஓசூர், கோவை பாலக்காடு மற்றும் ஆந்திரா, புதுச்சேரி எல்லைகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இபாஸ் இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளது.