தமிழகத்தில் 1 கோடியே 71 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை.!

பாலக்கோட்டில் 87.33 சதவீதமும், குறைந்த அளவாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதமும் பதிவாகின.

Update: 2021-04-08 05:15 GMT

தமிழகத்தின் 16வது சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் (ஏப்ரல் 6) நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். இதில் மொத்தம் 72.78 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது.

தமிழகத்தில் அதிகப்படியாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. குறைந்த பட்சமாக சென்னையில் 59.06 சதவீதம் பதிவாகியிருந்தது. தொகுதி அளவில் பாலக்கோட்டில் 87.33 சதவீதமும், குறைந்த அளவாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதமும் பதிவாகின.




 


மொத்தமாக 4 கோடியே 57 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். அதில் ஒரு கோடியே 71 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. கொரோனா தொற்று காரணமாக வாக்களிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் கிராமங்களை விட நகர மக்கள்தான் வாக்களிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News