ஒரே நேரத்தில் 2 கடலிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம்.!

அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் உருவாகக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

Update: 2021-03-29 13:20 GMT

வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது பற்றி வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் உருவாகக் கூடும் என கூறப்பட்டுள்ளது.


 



அதே போன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

Similar News