தமிழகத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது.!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி முதல் முககவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது என்று பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று ஏறுமுகமாகவே உள்ளது. இதனால் தமிழக அரசு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 10ம் தேதி முதல் முககவசம் அணியாமல் வந்தால் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது என பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.