தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீசார்.!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீசார்.!

Update: 2021-01-11 10:45 GMT

தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

அதே போன்று ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வருகிறது. அதே போன்று நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் மணிமுத்தாறு, பாபநாசம் அணை மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அணைகளில் நீர் அதிகமாக உள்ளதால் உபரி நீர் வெளியே திறந்து விடப்பட்டுள்ளது இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை குறுக்கத்துறை முருகன் கோயில் ஆற்றுநீரால் சூழப்பட்டு மண்டபம் வரை தண்ணீர் ஓடுகிறது. பாதுகாப்பு கருதி பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்க செல்லக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News