ஒரே நாளில் ரூ.167.87 கோடிக்கு மது விற்று தமிழக அரசு சாதனை.!
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட ஒரே நாளில் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட ஒரே நாளில் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வரும் நேரத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று 27 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஆயிரக்கணக்கான பேர் மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவை வாங்கி சென்றனர்.
கூட்டத்தை சமாளிக்க டாஸ்மாக் வாசலில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.49.54 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ.42.96 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் 38.72 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காலங்களிலும் ஆண்கள் மதுவுக்காக பல ஆயிரம் செலவு செய்து வருவது, பெண்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.