திருத்தணியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு! போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பல விதமான முயற்சிகளை செய்தும் பலனளிக்காததால், 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2021-09-20 09:51 GMT

திருத்தணி அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அருகே உள்ளது காசிநாதபுரத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வருவோர்கள் காலை முதல் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியாக பெண்கள், சிறுவர்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. கடையை மூட வலியுறுத்தி அந்த கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்நிலையில், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பல விதமான முயற்சிகளை செய்தும் பலனளிக்காததால், 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்ட டிஎஸ்பி சாய் பரனித் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டியதில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News