ஓசூரில் 18,000 பெண்களுக்கு வேலை அளிக்கும் டாடா நிறுவனம்: கிராமப்புறங்களில் இருந்து படித்த பெண்களை தேர்வு செய்யும் நிர்வாகம்!

டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் தனது புதிய உற்பத்தி நிறுவனத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தொடங்க உள்ளது. இந்நிறுவனமானது துல்லியமான இயந்திர பாகங்களை (மின்னணுவியல்) எலக்ட்ரானிக்ஸ் தொழில் நிறுவனங்களுக்காக தயாரிக்கி உள்ளது. இதில் சுமார் 18,000 பெண்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.

Update: 2021-10-09 11:06 GMT

இதற்காக படித்த திறமை வாய்ந்த கிராமப்புற பெண்களை நேரடியாக தேர்வு செய்து பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று தருமபுரி மாவட்டம், மருதம் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் டாடா நிறுவனம் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டு, திறமை வாய்ந்த பெண்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இன்றும், நாளையும் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வான பெண்கள் உடனடியாக ஓசூரில் உள்ள டாடா நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் கே.கோவிந்தன் பேசும்போது, கிராமப்புறத்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் மிகப்பெரிய நிறுவனமான டாடா, நேரடியாக பெண்களை வேலைக்கு எடுப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. தொழிற்கல்வி படிப்பதால் அனைவருக்கும் குறைந்த வயதில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மாவட்டத்தில் பெண்கள் அதிகளவு தொழிற்கல்வி படிப்பதற்காக எங்கள் கல்லூரியை தேர்வு செய்கின்றனர். ஒழுக்கம் மற்றும் கல்வியை வழங்குவதில் பெருமை அடைகிறோம். இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்தி கிராமப்புற பெண்கள் தங்களின் குடும்பத்தை உயர்த்த பாடுபட வேண்டும் என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பள்ளப்பட்டி ஆதிமூலம் மற்றும் கல்லூரி முதல்வர் மகேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News