ஆசிரியர் தேர்வில் குளறுபடி: 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நீக்க பரிந்துரை.!
கடந்த 2011 முதல் கடைசியாக பதவி வகித்த லதா வரை ஒன்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் கூறியுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் உதவி பேராசிரியர் தேர்வின் போது தாங்கள் சரியாக எழுதிய விடைகளை தவறு என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்ததாக, தேர்வர்கள் புகார் அளித்திருந்தனர்.
இதில் ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கௌதமன், லட்சுமிகாந்தன், அசோக்குமார் உள்ளிட்ட 5 பேர் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில தகவல் ஆணையம், விரிவான விசாரணை நடத்தியது.
இது குறித்து தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைவர் முத்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தேர்வு வாரிய பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவே, அந்த வாரியத்தில் தலைவர் பதவிகளை வகித்தவர்கள் பொறுப்பின்றி செயல்பட்டுள்ளனர் என்று குற்றச்சாட்டியிருந்தார்.
இதனை விசாரித்ததில், கடந்த 2011 முதல் கடைசியாக பதவி வகித்த லதா வரை ஒன்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் கூறியுள்ளது.
இதில் வாரிய தலைவர் பதவிகளை வகித்த ஐஏஎஸ் அதிகாரிகள் சுர்ஜித் சவுத்ரி, விபு நாயர், ஜெகன்நாதன், ஸ்ரீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வு மற்றும் பணியில் இருந்து அனுப்ப வேண்டும் என்று மாநில தலைமைச் செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த சம்பவம் தற்போது தமிழக அரசு உயர் அதிகாரிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர் பொறுப்பில் உள்ளவர்கள் நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்று மாணவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடுவது மற்ற அதிகாரிகளின் பணிகளை குறை சொல்வதாக அமைந்துள்ளது.