ஆசிரியர்கள் ஜூன் 20க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.!
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் தற்போது தடுப்பூசி ஒன்றே தான் வழி என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் தடுப்பூசி போடும் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு சில வாரங்களாக அதிகளவு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதனால் குறிப்பிட்டு மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.
இந்நிலையில், சென்னை மாவட்ட பள்ளி ஆசிரியர்கள் வருகின்ற ஜூன் 20-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை வழங்கியுள்ளார். தடுப்பூசி போடாதவர்கள் அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.