மருதமலை முருகன் கோயிலில் தெலங்கானா ஆளுநர் சாமி தரிசனம்.!

மருதமலை முருகன் கோயிலில் தெலங்கானா ஆளுநர் சாமி தரிசனம்.!

Update: 2021-01-31 16:15 GMT

பழனி முருகனை தரிசனம் செய்துவிட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் வந்துள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது குடும்பத்துடன் கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதே போன்று நேற்று பழனி முருகனை தரிசனம் செய்தார்.

இந்நிலையில், கோவை மருதமலை முருகன் கோயிலில் இன்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்திதது பேசியதாவது: கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து உலகம் விடுபட வேண்டும் என்று நேற்று பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தேன்.

இன்று மருதமலை முருகன் கோயிலுக்கு வந்துள்ளேன். நமது நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து இந்தியரும் இதற்காக பெருமைப்படுவார்கள். கடந்த ஆண்டு ஆரம்பித்த கொரோனா பிடியில் இருந்து நம்மை விடுபடுவதற்கு விஞ்ஞானிகள் வழிவகை செய்துள்ளனர். அதற்காக நாம் அனைவருமே விஞ்ஞானிகளுக்கு கடமை பட்டுள்ளோம். 

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்ப வேண்டாம். நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News