கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கரம்.. மின்கம்பி உரசி வெடி விபத்து.. சிறுவன் உயிர் இழப்பு..
கோவில் திருவிழாவின் போது சாமி ஊர்வலம் மின் கம்பியின் மீது பட்டாசு உரசி தீப்பிடித்து எரிந்ததில் மூன்று பேர் பலி.
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது மொரப்பூர் அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவில் திருவிழாவின் பொழுது தான் பயங்கர விபத்து ஒன்று நடைபெற்று இருக்கிறது. குறிப்பாக கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முன் தினம் மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. விதிஉலா வாகனத்தில் அம்மன் சிலை வைக்கப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டு இருக்கிறது.
இந்த ஊர்வலத்தின் போது வெடிப்பதற்காக வாங்கி வைத்த பட்டாசுகளை வாகனத்தில் முன்புறம் வைத்திருந்தார்கள். வாகனத்தை அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் எடுத்துக் கொண்டு சென்றார்கள். அப்பொழுது எதிர்பாராத விதமாக மின் கம்பிகள் உரசி சாமி ஊர்வலம் சென்ற வாகனத்தின் மேல் விழுந்தது. இதன் காரணமாக வாகனத்தில் இருந்த பட்டாசுகள் தீப்பொறி பட்டதில் அடுத்தடுத்து வெடித்து சிதறியது.
இதனால் வாகனத்தில் இருந்த சிறுவன் மற்றும் டிரைவர் ராகவேந்திரன் ஆகியோர் பலரும் படுகாயம் அடைந்து தூக்கி வீசப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஒரு சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சாமி சிலைகள் உட்பட வாகனமும் செய்துமடைந்து இருக்கிறது. கோவில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து சிதறி இரண்டு பேர் உட்பட சிறுவனும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதிகளில் சுகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Input & image courtesy: News