கோயில் நிலத்தை ஆக்ரமித்து பொழுதுபோக்கு பூங்கா ! காங்கிரஸ் M.L.Aவின் கைவண்ணம் !
இந்து கோயில் நிலங்களை ஆக்ரமித்து தங்கள் சுய லாபத்துக்காக பயன்படுத்தும் போக்கு தமிழகத்தில் அரங்கேறிவருவது வழக்கம். அந்த வகையில் பிரபல பொழுதுபோக்கு பூங்கா கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் எம்.எல்.எல்.ஏ ஊர்வசி செல்வராஜ்க்கு சொந்தமான குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா சென்னை பூந்தமல்லியில் இயங்கி வருகிறது. ஊர்வசி செல்வராஜ் மனைவிக்குப் பின்னர் அவரது மகனும் தற்போதைய ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏவுமான ஊர்வசி அமிர்தராஜ் அதனை நிர்வகித்து வருகிறார்.
இருபத்தி ஒரு ஏக்கர் கோயில் நிலத்தை ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் எம்எல்ஏ தன் வசப்படுத்தியுள்ளார் .கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குயின்ஸ்லேன்ட் பொழுதுப்போக்கு பூங்காவை இயக்கியதற்காக அதனை உடனடியாக அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அந்த பொழுதுபோக்கு பூங்காவின் மொத்த நில அளவு 177 ஏக்கர் ஆகும். அதில் இருபத்தி ஒரு ஏக்கர் பாப்பான்சத்திரத்திலுள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபால் சுவாமி கோயிலுக்கு சொந்தமானது என்றும், அதனை குத்தகைக்கு எடுத்த ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சொகுசு ரிசார்ட் போன்றவை நடத்தி வருகிறது.
1998 ஆம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது, கோவில் நிலத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததையடுத்து இரண்டு கோடியே 75 லட்சம் 46 ஆயிரத்து 748 ரூபாயை இழப்பீடாக செலுத்தும்படி பொழுது போக்கு பூங்கா நிர்வாகத்திற்கு 2013 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸை எதிர்த்து பொழுதுபோக்கு பூங்காவை நிர்வாகிக்கும் ராஜா ஹோட்டல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏதோ அநீதி இழைக்கப்பட்டது போல் வழக்கு தொடர்ந்தது.