கோயில் சொத்துக்களை முறைக்கேடாக விற்றவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு தகவல்.!

கோயில் சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2021-07-11 04:12 GMT

கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை முறைக்கேடாக விற்பனை செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.



திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கோயில் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டது பற்றிய ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாக கூறினார்.


கோயில் சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News